WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, August 21, 2014

பிளஸ் 2, 10ம் வகுப்பிற்கு காலாண்டு தேர்வு அறிவிப்பு

சென்னை : பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டுத் தேர்வு
அட்டவணையை, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் வெளியிட்டு உள்ளார்.
மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத்தேர்வை, மாணவர்கள், பயம் இல்லாமல் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக, பொதுத்தேர்வில் கடைபிடிக்கும் முறையைப் போலவே, காலாண்டு, அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, '10ம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு, செப்., 17ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரையும், பிளஸ் 2, காலாண்டுத் தேர்வு, செப்., 15ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரையும் நடக்கும்' என, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்து உள்ளார்.



No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.