WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, August 21, 2014

ஆசிரியர் பல்கலையில் எம்பில் படிப்பில் சேர ஆக.25 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தில் எம்பில் படிப்பில் சேர விரும்புபவர்கள்
விண்ணப்பிக்க வரும் 25ம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் எம்.பில்., முழுநேரம் மற்றும் பகுதி நேர கல்வியாக பல்வேறு பாடத்தலைப்புகளில் கற்றுத்தரப்படுகின்றன. 2014&15ம் கல்வி ஆண்டில் இப்பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயில கடந்த 4ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வரும் 25ம் தேதிவரை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என பதிவாளர் அறிவித்துள்ளார்.

விண்ணப்பங்களை பெற விரும்புவோர் பதிவாளர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம், சென்னை 5 என்ற முகவரிக்கு விண்ணப்ப கட்டணத்தை டிடி ஆக எடுத்து அனுப்ப வேண்டும்.

பொதுப்பிரிவினர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு ரூ.500, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரு.250 கட்டணம் ஆகும். இவர்கள் ஜாதி சான்றிதழ் நகலை இணைக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும்25ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்பிக்கவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளம் www.tnteu.in என்ற முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.