அரசு இன்ஜினியரிங் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் பணியிட
போட்டித்தேர்விற்கான விண்ணப்பங்கள், ஆக.,20 முதல் செப்.,5 வரை அந்தந்த மாவட்ட சி.இ.ஓ., அலுவலகங்களில் வினியோகிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதன்படி இப் பணிக்கு 2013-14 ஆண்டு போட்டி எழுத்து தேர்விற்கான விண்ணப்ப படிவங்கள், ஆக.,20 காலை 10 மணி முதல் செப்.,5 மாலை 5 மணிவரை, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களிலும்(சி.இ.ஓ.,) வினியோகம் செய்யப்படும் ஆசிரியர் தேர்வு
வாரியம் தெரிவித்துள்ளது. அதற்கான கட்டணம் 100 ரூபாய். அதனுடன் தகவல் தொகுப்பேடு வழங்கப்படும். அனைத்து விபரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து ஸ்டேட் வங்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சரியான தேர்வு கட்டணத்திற்கு 'டிடி' எடுத்து செப்.,5 மாலை 5 மணிக்குள் சி.இ.ஓ., அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அதற்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். தினசரி விற்பனை செய்யப்படும் விண்ணப்ப விபரத்தினை, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மெயில் செய்ய வேண்டும். இறுதியில் பூர்த்தி செய்யப்பட்ட பாடவாரியான விண்ணப்ப விபரத்தினை, செப்.,8ல், சென்னை ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் பணியாளர் மூலம் நேரில் ஒப்படைக்க வேண்டும் என, சி.இ.ஓ.,க்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.