WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, August 10, 2014

இந்தியாவிலும் எபோலா காய்ச்சல் பீதி: 24 மணி நேர அவசர உதவி மையம் திறப்பு".!

புதுடில்லி:எபோலா காய்ச்சல் உலகம் முழுவதும் பரவக்கூடும் என்று உலக
சுகாதார நிறுவனம் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து, துரிதமாக செயல்பட்ட மத்திய சுகாதார அமைச்சகம் 24 மணி நேர அவசர உதவி மையத்தை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இன்று முதல் செயல்பட தொடங்கும் இந்த உதவி மையத்தின் அவசர அழைப்பு தொலைபேசி எண்கள் '011-23061469, 3205 மற்றும் 1302' என்று அறிவித்த மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், 'எபோலா காய்ச்சல் பற்றி மக்கள் பீதியடைய தேவை இல்லை. இது தொடர்பாக, தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. எபோலா அறிகுறிகளால் பாதிக்கப்படும் டில்லிவாசிகளுக்கு சிகிச்சை அளிக்க டில்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார். மேலும், எபோலா நோயின் தாக்கம் தொடர்பாக கண்காணித்து, உஷார் நிலையில் இருக்கும்படி அனைத்து மாநில அரசுகளின் தலைமை செயலாளர்களுக்கும் அறிவுறுத்தி இருப்பதாகவும், எபோலா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வசித்து வரும் சுமார் 47 ஆயிரம் இந்தியர்களை அங்குள்ள இந்திய தூதரகம் தொடர்பு கொண்டு, இந்நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. எபோலா காய்ச்சலால் ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, சியானா, சையர் லியோன் ஆகிய 4 நாடுகளில் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை சுமார் ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். எபோலா காய்ச்சல் அறிகுறிகளுடன் ஆயிரக்கணக்கானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எபோலா நோய் தாக்கியவர்களுக்கு கடுமையான காய்ச்சல், கட்டுக்கடங்காத ரத்தக் கசிவு போன்ற அறிகுறிகள் தெரியும். இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் மார்கரெட் சான் கூறுகையில், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் எபோலா வைரஸ் தொற்று நோயால் மக்கள் உயிரிழக்கிறார்கள்.இந்த நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சர்வதேச உதவிகள் தேவையாக இருப்பதாக கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.