WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, August 8, 2014

தமிழகத்தில் 3 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலி

தமிழகத்தில் காலியாக உள்ள 3 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் விஜயகுமார் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

மதுரையில் நாளை (9ம் தேதி) முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர். மாணவர்களின் வேலை, கல்வி தொடர்பான 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. தேர்ச்சி விகிதம் குறைந்தால் ஆசிரியர்களுக்கு மெமோ வழங்குதல், சஸ்பெண்ட் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதனால் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. அவற்றை உடனே நிரப்ப வேண்டும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு குறித்து கருணாகரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி பதவி உயர்வு, பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆசிரியர்கள் பாஸ்போர்ட் மற்றும் நிலம் வாங்க வேண்டும் என்றால் கூட இயக்குநர் அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டியுள்ளது. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் அனுமதி வழங்க வேண்டும். பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த திருச்சி, சென்னையில் மையம் அமைக்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

2 comments:

  1. last examla irunthu intha 3000 post eduthokunga plz, job kedikarangavangulkum cut off one or two mark than difference so 2 mark kammi irukarathula talent illathavanga meaning illa, so plz appoint from last exam give additional list atleast CV mudicha ellarukumvathu job kodunga plzzzzzzzzzzzzz..3000 vacant iruku illa kodukalam.

    ReplyDelete
  2. Yes selvam.
    Please put posting for all CV completed candidates in PG TRB. We are all awaiting for the govt job after leaving private job even in last cut off.

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.