WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, August 8, 2014

பி.எட். படிப்பு இரண்டாண்டாக அதிகரிப்பா? உயர்கல்வித் துறை அமைச்சர் விளக்கம்

பி.எட். படிப்புக்காக காலத்தை இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கு
ம் விஷயத்தில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை எனவும், அது ஆய்வில் இருப்பதாகவும் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவை குழு துணைத் தலைவர் பாலபாரதி துணைக் கேள்வி எழுப்பினார். அப்போது, பேசிய அவர், தனியார் பி.எட்., கல்லூரிகளில் நியாயமற்ற வகையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவற்றை முறைப்படுத்த வேண்டும். மேலும், பி.எட். படிப்புக்கான காலத்தை இரண்டு ஆண்டுகளாக நீட்டிப்படுவதாகக் கூறப்படுகிறது. அது குறித்தும் விளக்க வேண்டும் என்றார்.
இதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்:
பி.எட். படிப்புக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படாமல் இருந்தது. இப்போது, ஓய்வு பெற்ற நீதிபதி என்.வி. பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. அதன்படி, அரசு பி.எட். கல்லூரிகளில் ரூ.2,250-ம், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ரூ.10 ஆயிரமும், தனியார் கல்லூரிகளில் ரூ.41,500-ம், தரச்சான்று பெற்ற தனியார் கல்லூரிகளில் ரூ.46 ஆயிரமும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பி.எட். படிப்பின் காலத்தை இரண்டு ஆண்டுகளாக அதிகரிப்பது தொடர்பாக, தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் ஆய்வு செய்து வருகிறது. அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார் அமைச்சர் பழனியப்பன்.

5 comments:

  1. hello friends pg physics la cutoff bc ku ethu varaikum vara chance irukunu solla mudiuma...........? my wtg is 103+4=107, chance iruka any one tell me please............

    ReplyDelete
    Replies
    1. hello friends pg physics la cutoff bc ku ethu varaikum vara chance irukunu solla mudiuma...........? my wtg is 103+4=107, chance iruka any one tell me please............

      Delete
    2. hello friends pg physics la cutoff bc ku ethu varaikum vara chance irukunu solla mudiuma...........? my wtg is 103+4=107, chance iruka any one tell me please............

      Delete
    3. hello friends pg physics la cutoff bc ku ethu varaikum vara chance irukunu solla mudiuma...........? my wtg is 103+4=107, chance iruka any one tell me please............

      Delete
    4. hello friends pg physics la cutoff bc ku ethu varaikum vara chance irukunu solla mudiuma...........? my wtg is 103+4=107, chance iruka any one tell me please............

      Delete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.