WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, August 5, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு எவ்வளவு?

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில்
வழங்கப்படும் இட ஒதுக்கீடு குறித்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் விளக்குகின்றனர்.
www.kalvikkuyil.blogspot.com
மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு மற்றும் அரசு சார்ந்த துறை வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறதா?
www.kalvikkuyil.blogspot.com
அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகள் பணிபுரிய 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்படி காலி பணியிடங்களில் பார்வையற்றோருக்கும், கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி, செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி ஆகியோருக்கும் தலா ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது
கல்வி நிறுவனங்களில் உள்ள பணியிடத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறதா?
www.kalvikkuyil.blogspot.com
கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை மொத்த பணியிடங்களில் 2 சதவீதம் செவித் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அரசு மற்றும் அரசு சார்ந்த கல்வி நிறுவனத்தில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதுபோல, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியப் பணியிடங்களில் 2 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
கல்வி நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகள் படிப்பதற்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறதா?
www.kalvikkuyil.blogspot.com
கல்வி நிறுவனங்களிலும் பார்வையற்ற, கை, கால் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகள் படிக்க மொத்தம் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
நன்கு படிக்கும் மாற்றுத் திறன் மாணவ, மாணவிகளுக்கு பரிசு ஏதேனும் வழங்கப்படுகிறதா?
www.kalvikkuyil.blogspot.com
10-ம் வகுப்பு, பிளஸ்2 பொதுத்தேர்வுகளில் மாநில மற்றும் மாவட்ட அளவில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி பிளஸ்2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிப்பவருக்கு ரூ.6 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.4 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.4 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.2,500, மூன்றாம் பரிசாக ரூ.1,500 வழங்கப்படுகிறது.
www.kalvikkuyil.blogspot.com
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிப்பவருக்கு ரூ.4 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.
www.kalvikkuyil.blogspot.com
மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.2 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.1,500, மூன்றாம் பரிசாக ரூ.1,000 வழங்கப்படுகிறது.

1 comment:

  1. அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் வேலை வாங்கி தருவதாக சேலத்தில் சிலர் விண்ணப்பம் வழங்கினர். இது உண்மை என நம்பிய மாணவ, மாணவிகள் பலர் விண்ணப்பங்களை வாங்கி இதனுடன் ரூ.10ஆயிரத்திற்கு உரிய டி.டியை இணைத்து கொடுத்தனர். இப்படி பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது.

    இந்த மோசடியை அறிந்த சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தார்.

    இதையடுத்து இந்த வழக்கை சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து திருச்சியை சேர்ந்த முருகானந்தம்(வயது 42), கோவையை சேர்ந்த பாலகுமரன் (வயது 45), சேலத்தை சேர்ந்த ராஜ்குமார்(வயது 30), சந்திரசேகர்(வயது 32) ஆகியோரை நேற்று கைது செய்தனர். பின்னர் இவர்கள் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த மோசடியில் மேலும் பலர் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சென்னையை சேர்ந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

    இந்த மோசடியை அறிந்த திரளான மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் தாங்கள் வழங்கிய டி.டி. தொகையை திரும்ப பெற்று தருமாறு சேலம் டவுன் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள சேலம் மாநகர் மத்திய குற்றப்பிரிவுக்கு வந்து மனு கொடுத்து செல்கிறார்கள்.

    இதன் மீதும் விசாரணை நடக்கிறது. இந்த மோசடியில் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்றும் விசாரணை நடக்கிறது.
    Please take care

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.