WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, August 5, 2014

முதுகலை ஆசிரியர் இறுதி பட்டியல் கேட்டு டி.ஆர்.பி., அலுவலகம் முற்றுகை



www.kalvikkuyil.blogspot.com

அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்  பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகள் 2013 ஜூலை 21ம் தேதி நடந்தது.  தேர்வு முடிவுகள் அக்டோபர் 7ம் தேதி வெளியிடப்பட்டது. 
இதுதொடர்பாக நடந்த வழக்கின்  தீர்ப்பின்படி 2014 ஜனவரி 17ம் தேதி திருத்தப்பட்ட முடிவுகள் வெளியிடப்பட்டு தேர்ச்சி  பெற்றவர்களுக்கு சான்று சரி பார்ப்பு நடத்தப்பட்டது. அதன்படி தற்காலிக தெரிவுப்  பட்டியல்கள் வெளியிடப்பட்டன. அதில் விலங்கியல், புவியியல், மனையியல்,  விளையாட்டு ஆசிரியர் கிரேடு-1, உயிரி வேதியியல் ஆகிய பாடங்களில் தெரிவு பட்டியல்  வெளியிடப்பட்டது. 
மற்ற பாடங்களுக்கான பட்டியல்கள் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு  வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்து  இருந்தது. இதையடுத்து,  முதுநிலை பட்டதாரிகள் தெரிவுப் பட்டியலை வெளியிட கோரி  ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மனு கொடுத்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை  60க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரிகள், ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு திரண்டு  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை  நடத்தினர். 
பின்னர் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரை சந்தித்து பேச ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து  ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறும் போது, முதுநிலை பட்டதாரிகள் போட்டித்  தேர்வு தொடர்பாக பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர்  நீதிமன்றக்கிளை ஆகியவற்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக் கின் முடிவுகள்  சில வெளியாகியுள்ள நிலையில் இன்னும் சில  வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட  வேண்டியுள்ளது. இறுதித் தீர்ப்பு வெளியானதும் மற்ற பாடங்களுக்கான தெரிவுப் பட்டியல்  வெளியிடப்படும். வரும் 14ம் தேதி திருத்திய பட்டியல் ஒன்று வெளியிட உள்ளோம்.  அப்போது வெளியாகவும் வாய்ப்புள்ளது என்றனர்.www.kalvikkuyil.blogspot.com

நேரடி மற்றும் செய்தித்தாள்களில் வரும் கல்வி + வேலைவாய்ப்பு தொடர்பான‌ செய்திகளை முதலில் வெளியிடும் ஒரே வலைதளம் உங்கள் கல்விக்குயில் மட்டுமே

17 comments:

  1. Enna solreenga case innum iruka. Entha subject ku case iruku. Athuvum thiruthiya pattiyal veliyidappadum endral eppadi. Therinthavargal sollunga please.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Chemistry subject ku any case eruka ?anybody knows

    ReplyDelete
    Replies
    1. No cases in chemistry subject friend dnot worried k

      Delete
    2. Sir/mam...indha month kulla join panna chance irukka...pls solunga..romba kavalaiya irukku..

      Delete
  4. Maths sub case iruka therinthavarkal solungal.....plz am last mark in maths.plz inform panunga.....

    ReplyDelete
  5. முதுகலை ஆசிரியர்க்களுக்கான இறுதி பட்டியலின் தாமதத்திற்கு காரணம் வழக்ககுகள் அல்ல அப்படியனில் தமிழாசிரியர் நியமிக்கபட்டிருக்க முடியாது... தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுடன் சேர்த்து பணிநியமன விழா நடத்த திட்டம் உள்ளதாக தெரிகிறது ஆனால் அதனால் ஏற்படும் கால தாமதம் மிகுந்த மனவேதனை தருகிறது விரைவில் இதற்கு ஒரு முடிவுகான அரசிடம் வேண்டுகிறோம்

    ReplyDelete
  6. After revaluations of commerce subject; bcw category pl tell the expected cut off

    ReplyDelete
  7. Appo final list ilaya 14th Vida porathu..eppo than naama ellam job join pannuvom..

    ReplyDelete
  8. on sep 5th or oct 5th because quarterly exam over that day ..................on dec half yearly over . ...............after jan2015 revision exam will be going on .permonth 6.82 cror saving to state govt.(2200x310000)

    ReplyDelete
  9. please take care friends
    அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் வேலை வாங்கி தருவதாக சேலத்தில் சிலர் விண்ணப்பம் வழங்கினர். இது உண்மை என நம்பிய மாணவ, மாணவிகள் பலர் விண்ணப்பங்களை வாங்கி இதனுடன் ரூ.10ஆயிரத்திற்கு உரிய டி.டியை இணைத்து கொடுத்தனர். இப்படி பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது.

    இந்த மோசடியை அறிந்த சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தார்.

    இதையடுத்து இந்த வழக்கை சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து திருச்சியை சேர்ந்த முருகானந்தம்(வயது 42), கோவையை சேர்ந்த பாலகுமரன் (வயது 45), சேலத்தை சேர்ந்த ராஜ்குமார்(வயது 30), சந்திரசேகர்(வயது 32) ஆகியோரை நேற்று கைது செய்தனர். பின்னர் இவர்கள் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த மோசடியில் மேலும் பலர் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சென்னையை சேர்ந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

    இந்த மோசடியை அறிந்த திரளான மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் தாங்கள் வழங்கிய டி.டி. தொகையை திரும்ப பெற்று தருமாறு சேலம் டவுன் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள சேலம் மாநகர் மத்திய குற்றப்பிரிவுக்கு வந்து மனு கொடுத்து செல்கிறார்கள்.

    இதன் மீதும் விசாரணை நடக்கிறது. இந்த மோசடியில் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்றும் விசாரணை நடக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. summa ukkanthu comment kudukkarathu easy than sir. anga vanthu parunga sir. ean vara yosikarenga. yaravathu ketu news kudupanga vetla erunthu ketukalam or varumbo varattum erukkara job pothum nu irukathenga...

      Delete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.