WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, August 5, 2014

பி.எட். படிப்பு ஆன்–லைன் கவுன்சிலிங் நாளை தொடக்கம்: கட்–ஆப் மதிப்பெண் வெளியீடு.

சென்னை,
ஆக. 5– அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியயல் கல்லூரிகளில் பி.எட்.
படிப்பில் 2,155 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவ, மாணவிகளை சேர்ப்பதற்கான ஆன்– லைன் கலந்தாய்வு நாளை (6–ந்தேதி) தொடங்குகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜி.விஸ்வநாதன் கூறியதாவது:–
அரசு, அரசு உதவி பெறும் சிறுபான்மை அல்லாத கல்வியியல் கல்லூரி, அரசு உதவபெறும் சிறுபான்மையினர் கல்லூரிகளில் உள்ள 2,155 பி.எட். இடங்களுக்கு 10 ஆயிரத்து 450 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கான கலந்தாய்வு நாளை தொடங்கி 9–ந்தேதி வரை நடைபெறுகிறது. சென்னையில் பல்கலைக் கழக வளாகத்திலும், மதுரையில் தூய ஜஸ்டின் கல்லூரியிலும், சேலத்தில் சாரதா கல்லூரியிலும், கோவையில் அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியிலும் ஆன்–லைன் மூலம் ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
அழைப்பு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கல்லூரிகளுக்கு மட்டும்தான் கலந்தாய்விற்கு செல்ல வேண்டும்.
ஆசிரியர் தகுதித்தேர்வு காரணமாக கல்வியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை.
இந்த ஆண்டு திருவள்ளூர், வேலூர் ஆகிய இடங்களில் புதிதாக கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தவிர புதிதாக கல்லூரிகள் தொடக்க 10 விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு வந்துள்ளன. ஆசிரியர் தகுதித் தேர்வை கல்வியியல் கல்வி பயிலும் மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் ஒரு பாடத்திட்டம் உள்ளது.
அதனை விரும்புவோர் மட்டுமே தேர்ந்தெடுத்து படித்து வருகிறார்கள். அதனை கட்டாய பாடத்திட்டமாக்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம். அவ்வாறு சேர்த்தால் ஆசிரியர் தகுதித் தேர்வை எளிதாக எதிர்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.