WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, August 5, 2014

ஆசிரியர் தேர்வு பட்டியல் இந்த வாரம் வெளியாகிறது, கூடுதலாக 508 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்.!

சென்னை,
ஆக. 5– அரசு நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும்
மேல்நிலைப் பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் அவர்களை நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஜூலை 31–ந்தேதிக்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இதுவரை ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை.
தமிழகம் முழுவதும் தேர்வு முடிவுக்காக ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இறுதி தேர்வுப்பட்டியல் இந்த வாரத்திற்குள் எப்படியும் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் வசுந்தராதேவி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:– ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10,726 பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களுடன் புதிதாக 508 காலி இடங்கள் சேர்க்கப்படுகிறது.
காலி இடங்கள் அதிகரித்து உள்ள நிலையில் கல்வி அதிகாரிகள் ஒப்புதலுடன் இந்த பட்டியலில் மேலும் 508 பேரை தேர்வு செய்கிறோம்.
இந்த பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

  1. பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
    அவர்களை நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    அவர்களை நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இறுதி தேர்வுப்பட்டியல் இந்த வாரத்திற்குள் எப்படியும் வெளியிடப்படும்

    இந்த பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.





    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.