WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, August 19, 2014

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாற்றுப்பணி: உயர்நீதிமன்றம் உத்தரவு

மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேருக்கு மாற்றுப்பணி வழங்க
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு அரசுத்துறையில் மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் கடந்த 2011-ம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டனர். மீண்டும் தங்களுக்கு பணி வழங்கக்கோரி கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நலப்பணியாளர்கள், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மக்கள் நலப்பணியாளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பால்வசந்தகுமார், சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்களில் மக்கள் நலப்பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும், வயது வரம்பை கணக்கிடாமல் கல்வித்தகுதியின் அடிப்படையில் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அக்டோபர் 31-ம் தேதிக்குள் அவர்களுக்கு பணி வழங்காவிட்டால் ஏற்கனவே தந்த ஊதியத்தை தரவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.