சென்னை பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் குரூப் 4
பணிக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. 645 பணியிடங்களை நிரப்ப 822 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், குரூப் 4 பணியில் அடங்கிய இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (2013&14ம் ஆண்டு) பதவிகளில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி நடந்தது. இதில், வெற்றி பெற்றவர்கள் முறையே மூன்றாம், இரண்டாம் மற்றும் முதலாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.
அதன்படி சென்னை பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நேற்று காலை 8.30 மணியளவில் கலந்தாய்வு தொடங்கியது. அதன் பின்னர், காலை 10 மணியில் இருந்து சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றன. முதல் நாளில் 143 பேர் பங்கேற்றனர். இன்றும் தொடர்ந்து கலந்தாய்வு நடக்கிறது.
16 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 40 பேரும், தட்டச்சர் பணிக்கு 282 பேர் உட்பட மொத்த முள்ள 645 பணியிடங்களை நிரப்ப 822 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பின்னர் தேர்வாளர்களுக்கு பணிகள் ஒதுக்கப்படும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.