WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, August 12, 2014

இடைநிலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரி பார்ப்பு சிறப்பு முகாம்

இடைநிலை ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் சரி பார்ப்பு
பணி, விழுப்புரத்தில் நேற்று துவங்கியது.தமிழக அரசு தேர்வு வாரியம் கடந்த இரு ஆண்டுகளில் நடத்திய இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதியவர்களின் சான்றிதழ்கள், ஏற்கனவே சரி பார்க்கப் பட்டது. இதில், விடுபட்டவர்களின் சான்றிதழ்களை சரி பார்க்கும், சிறப்பு முகாம் நேற்று துவங்கியது. தமிழகத்தில் விழுப்புரம், திருச்சி, சேலம், மதுரையில் நேற்று துவங்கி, 3 நாட்கள் சான்றிதழ் சரி பார்ப்பு முகாம் நடக்கிறது. விழுப்புரம் அரசு மகளிர் பள்ளியில் நேற்று நடந்த முகாமை, தமிழக அரசு தேர்வு வாரிய இணை இயக்குனர் பூபதி நேரில் பார்வையிட்டார். விழுப்புரம் சி.இ.ஓ., மார்ஸ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளர் புருஷோத் தமன், தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள் சான்றிதழ் சரி பார்ப்பு பணியை மேற்கொண்டனர். விழுப்புரத்தில் நடந்த முகாமில் சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.