WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, August 12, 2014

டி.இ.டி., சீர்மரபினர் சான்றிதழ் சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்

டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்ற சீர்மரபினர் இடைநிலை ஆசிரியர்கள் உரிய
சாதி சான்றிதழ்களை சமர்பிக்க, இன்று (ஆக.,12) கடைசி நாள், என டி.ஆர்.பி.,தெரிவித்துள்ளது.

கள்ளர் சீரமைப்பு துறையில், பல ஆண்டுகளாக காலியாக உள்ள இடைநிலைஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, டி.இ.டி.தேர்வில் தாள்-1 ல் தேர்ச்சி பெற்ற மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த சீர்மரபினர் பிரிவில் உள்ள இந்து பிரமலைக்கள்ளர் வகுப்பை சேர்ந்தவர்கள், மதுரையில் உள்ள ஓ.சி.பி.எம்., பள்ளியில் உரிய சான்றிதழ்களுடன் நேரில் ஆஜராகி, சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்,என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று துவங்கிய சான்றிதழ் சரி பார்ப்பு பணி இன்றுடன் (ஆக., 12) முடிவடைகிறது. உரிய சாதி சான்றிதழை சமர்பிக்காதவர்கள் இப் பிரிவின் கீழ் பணிநியமனம் செய்யப்பட மாட்டார்கள், என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.