WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, August 16, 2014

கல்வி உதவித்தொகைக்கு திறனாய்வுத் தேர்வு மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க அழைப்பு..

கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வுக்கு வரும் 18-ஆம்
தேதி முதல் 22-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மண்டல தேர்வுத்துறை துணை இயக்குனரின் செயலர் ந.மாதவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கான 2014-ஆம் ஆண்டு திறனாய்வுத் தேர்வுக்கு வரும் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.
அதற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தேர்வுக்கு விண்ணப்பிக்க பின்வரும் தகுதிகளை மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும்.
கிராமப்புற பகுதியில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில், கடந்த 2013-14-ஆம் கல்வியாண்டில் 8-ஆம் வகுப்பு தேர்வில் 50 சதவீத மதிப்பெண்ணுடனும் தேர்ச்சி அடைந்து, தற்போது 9-ஆம் வகுப்பு படிப்பவராக இருக்க வேண்டும்.
திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்யும் மாணவரின் பெற்றோர் ஆண்டுக்கு ரூ. ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருப்பதற்கான வருவாய்த்துறை சான்று அளிக்க வேண்டும். தேர்வுக்கட்டணம் ரூ.5, சேவைக்கட்டணம் ரூ.5 என மொத்தம் ரூ.10-யை, ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சேர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் உரிய முறையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 நபர்களுக்கு (50 மாணவர்கள், 50 மாணவிகள்) 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் காலத்துக்கு கல்வி உதவித் தொகையாக ஆண்டுக்கு ரூ. ஆயிரம் வழங்கப்படும். நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதியில் படிக்கும் மாணவர்களும், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பயில்வோரும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க இயலாது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.