WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, August 18, 2014

ஆசிரியர் தகுதிதேர்வில் மதிப்பெண் சலுகை பட்டதாரி ஆசிரியர்கள் வேண்டுகோள்

வேலையில்லாத பட்டதாரி ஆசிரியர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 2012–ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண் சலுகை அளிக்கப்படவில்லை. ஆனால் 2013–ம் ஆண்டு நடந்த தேர்வில் மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. புதுவை அரசு கடந்த 2012–ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் மதிப்பெண் சலுகை அளிக்கவேண்டும்.

கட்டாய கல்வி சட்டத்தின்படி ஒன்று முதல் 8–ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற வேண்டும். அதற்காக 2012–ம் ஆண்டில் இருந்து ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. புதுவை கல்வித்துறையில் அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு சீனியாரிட்டி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாமல் பட்டதாரி ஆசிரியர் வேலை பதவி உயர்வு மூலம் கொடுக்க சட்டம் உள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் அனைத்து பிரிவினருக்கும் ஒரே மாதிரியாக தேர்ச்சி மதிப்பெண்ணை நிர்ணயித்தது சட்டவிரோதம். இது அரசியல் சட்டத்தை மீறிய செயல். எனவே இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைத்து நிர்ணயித்து, தனது அரசியல் சட்ட கடமையை புதுவை அரசு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.