WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, August 17, 2014

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தாற்காலிக கணக்காளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.!

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வட்டார வள மையங்களில் தாற்காலிக
கணக்காளர் பணியிடங்களுக்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


விருதுநகர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் செயல்படும் வட்டார வளமையங்களில் கணக்காளர் பணியிடங்கள் தாற்காலிகமாக நிரப்பப்பட இருக்கிறது. இப்பணிக்கு பி.காம் பட்டப்படிப்புடன், கணிப்பொறி(Tally) முடித்து தகுதிச் சான்று பெற்றிக்க வேண்டும். அதோடு, 1.8.2014 அன்று 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.இதற்கான விண்ணப்பம் அனைவருக்கும் கல்வி இயக்கம் மாவட்ட திட்ட அலுவலக வளாகத்தில் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதை பிரதி எடுத்து பூர்த்தி செய்து அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வரும் செப்-1ம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரடியாக அளிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பம் செய்தவர்களில் தகுதியானவர்கள் மட்டுமே ஆக.13-ம் தேதி நடைபெற இருக்கிற எழுத்துத் தேர்வுக்கு கடிதம் மூலம் அழைக்கப்படுவார்கள். இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அந்தந்த வட்டார வளமையம் மூலம் மாதந்தோறும் நிலையான பயணப்படி உள்பட மாதந்தோறும் ரூ.9900 மட்டும் தொகுப்பூதியமாக வழங்கப்படும். எனவே இப்பணிக்கு தகுதியான பட்டதாரி இளைஞர்கள் குறிப்பிட்ட நாள்களுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.    

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.