WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, September 3, 2014

இடைநிலை ஆசிரியர் பணி பதிவேடு; வரும் 8ல் கட்டாயம் துவங்க உத்தரவு

புதிய இடைநிலை ஆசிரியர்களுக்கு, பணியில் சேரும் நாளன்றே (8ம் தேதி)
பணி பதிவேடு துவங்க, தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்வான ஆசிரியர்களுக்கு, "ஆன்-லைன்' மூலம் பணி நியமன கலந்தாய்வு, கடந்த 30ம் தேதி முதல் நடந்து வருகிறது. முதுகலை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரி யர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு என கலந்தாய்வு நடக்கிறது.புதிய இடைநிலை ஆசிரியர்கள், வரும் 8ல் பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் பணியில் சேரும் நாளன்றே, பணி பதிவேடு துவக்க வேண்டும் என தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.இடைநிலை ஆசிரியர்கள், வரும் 6க்குள், பணி நியமன உத்தரவை பெற்றுக்கொண்டு, 8ம்தேதி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளியில் சேர வேண்டும். இதற்காக, புதிய பணி பதிவேடு தொகுதி 1, ஜாதி சான்று, மருத்துவ சான்று, அனைத்து கல்வி சான்றுகளின் உண்மை நகல் மற்றும் ஜெராக்ஸ், பாஸ்போர்ட் அளவு போட்டோ ஒன்று ஆகியவற்றை, பணியில் சேரும் நாளன்று, இடைநிலை ஆசிரியர்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.
புதிய ஆசிரியர்கள், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவர்; பணியில் சேர்ந்த நாளன்றே அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். சிறப்பு வைப்பு நிதி திட்டத்தில், ஆசிரியர் மற்றும் அவரது "நாமினி' குறித்த விவரங்களை அளிக்க வேண்டும்.

சில ஒன்றியங்களில் அதிகளவில் இடைநிலை ஆசிரியர்கள் பணியில் சேர வாய்ப்புள்ளது. அங்குள்ள உதவி தொடக்க கல்வி அலுவலகங்களில், அமைச்சு பணியாளர் பற்றாக்குறையால், இடைநிலை ஆசிரியர் பணி பதிவேடு மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், சிறப்பு வைப்புநிதி திட்டம் போன்றவற்றுக்கான படிவங்களை பூர்த்தி செய்வதில், தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அன்று ஒருநாள் மட்டும், கல்வித்துறை அலுவலகத்தில் உள்ள அலுவலர்களை, மாற்றுப்பணியாக நியமித்து, இப்பணி தொய்வின்றி நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

3 comments:

  1. if u know anybody plz reply..about PG counselling absenties in zoology..2nd list possible or not?

    ReplyDelete
  2. college lectures 1664 post notification koduthanga first, cv complete panni, oral test hall ticket vanthu process start pannitana ipo additional 300 post add panni irukanga, but PGTRB 2012 -13 2881 post codunct pannitu, 2013-14 upgrade school 900 post vacant irukum pothu last examla irunthu edutha ena? ketta process start pannitangala..apo arts college lectures kooda than process strat agi end varaikum vanthuchu..ipo 2014=15, 900 post vera vacant iruku..plz give job last cut off cv attend candiates..TRB rights to increase posting..plz think trb..same cut off mark posting got and joined, but we are same mark didnt get job..plz consider my case...
    2013-14=900
    2014-15=900 post vacant is there..

    ReplyDelete
  3. இன்னும் அதிக இடங்கள் உங்கள் பாடத்தில் காலியாக உள்ளதாக (After appointment) தகவல் ஆனால் அதை நிரப்புவதற்க்கு இரண்டாம் பட்டியல் தயார்செய்து தேர்வு செய்வார்களா என்பது தெரியவில்லை நண்பரே?

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.