WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, September 24, 2014

மங்கள்யான் வெற்றிகரமாக நிலை நிறுத்தம்: இனி செவ்வாய் தோஷம் அல்ல... செவ்வாய் தேசம்...!






மங்கள்யான் செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாகநிலை நிறுத்தப்பட்டதால் இனி வரும் காலங்களில் செவ்வாய் தோஷம் அல்ல... செவ்வாய் தேசம்...! என்றார் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் எஸ்.டி.பாலகிருஷ்ணன்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற மங்கள்யான் செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டதைப் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடும் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் அவர் பேசியதாவது:

சூரியக்குடும்பத்தின் நான்காவது கோளான செவ்வாய் கிரகத்திற்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2013 நவம்பர். 5 -ம் தேதி மங்கள்யான் செயற்கைக்கோள் ஏவப்பட்டது.300 நாட்களுக்கு மேல் பயணம் செய்து 2014 செப்டம்பர் 24 -ம் தேதி காலை 7 மணி,17 நிமிடம், 32 வினாடியில் செவ்வாய்க்கிரச் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது மாபெரும் வரலாற்றுச் சாதனையாகும். இச்சாதனைக்குக் காரணமான இந்திய விஞ்ஞானிகள் பாராட்டுக்குரியவர்கள். சுதந்திரமாகவும், சுயசார்பாகவும் முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தால் உருவான செயற்கைக்கோள் என்பதில் நாம் ஒவ்வொருவரும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இந்த வெற்றியின் மூலம் பல புதிய நம்பிக்கைகள் பிறந்துள்ளது.

இந்த வெற்றி சாதி, மதம், இனம், மொழி கடந்து பணியாற்றிய விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சிக்கு கிடைத்தவையாகும். இந்திய அரசு அறிவியல் ஆய்வுகளுக்கு அதிகமான நிதி ஒதுக்கினால் இன்னும் ஏராளமான சாதனைகளை நமது விஞ்ஞானிகள் செய்து முடிப்பார்கள். மேலும் அறிவியல், கல்விக்கு அதிகமான நிதி வசதிகளையும் செய்து மாணவர்களை அறிவியல் ஆய்வில் ஈடுபடுத்த முயற்சிக்க வேண்டும். மங்கள்யான் வெற்றியை உலக நாடுகளுக்கு போட்டியாக அல்லாமல் அறிவியல் ஆராய்ச்சியில் ஆரோக்கியமான சூழலை உருவாக்க வேண்டும். செவ்வாய் ஒரு செந்நிறக்கோள். செவ்வாய் கிரகத்தில் மாங்கள்யான் சாதனை செய்துள்ள வேளையில் செவ்வாய் தோஷம் என்கிற பெயரில் நடைபெறும் மூட நம்பிக்கைகளை ஒழிய வேண்டும். செவ்வாயில் மனிதன் வாழலாமா என்ற ஆராய்ச்சி நடைபெறும் வேளையில் செவ்வாய் தோஷம் என்பது அறிவியலுக்குப் புறம்பானதாகும். இனி வரும் காலங்களில் செவ்வாய் தோஷமல்ல... செவ்வாய் தேசம்...! என்பதை மக்கள் புரிந்துகொள்ளவார்கள் என்றார்.

புதுக்கோட்டை டிவிஎஸ் பேருந்து நிறுத்தம் மற்றும் எஸ்.எப்.எஸ்.மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகம் உட்பட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை காலையில் 6.30 மணியிலிருந்து இந்திய விண்வெளித்துறையின் சாதனை குறித்து பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவர் அ.மணவாளன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச்செயலர் குமரேசன், எஸ்.எப்.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் அருள் பிரான்சிஸ், துளிர் இல்ல மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுப்பிரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும், பள்ளி செல்லும் மாணவர்களுக்கும் இனிப்பும், துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. துளிர் இல்ல மாணவர்கள் சுபிக்‌ஷா, அருண்குமார், ஆண்ட்ரு, அமலன், நித்திஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். மாவட்டச்செயலர் எம்.வீரமுத்து வரவேற்றார். மாவட்டப்பொருளர் கா.ஜெயபாலன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கலிலி கலிலியோ, சர்.சி.ராமன், மேரி கியூரி, கல்பனா சாவ்லா ஆகிய துளிர் இல்லங்களின் குழந்தைகள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.