WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, September 26, 2014

புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை இன்றே பணியில் சேர கல்வித்துறை உத்தரவு

புதிய ஆசிரியர்கள் பணியில் சேர, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை
வழங்கிய இடைக்கால உத்தரவு, நேற்று முன்தினம் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், புதிய ஆசிரியர்களுக்கு, நேற்று, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் அனைவரும், இன்றே பணியில் சேர வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 12,700 புதிய ஆசிரியரைநியமனம் செய்வதற்கானகலந்தாய்வு, ஆகஸ்ட் இறுதி யில் துவங்கி, செப்., முதல் வாரம் வரை நடந்தது.

'வெயிட்டேஜ்' மதிப்பெண் தொடர்பான வழக்கில், புதிய ஆசிரியர்கள் பணியில் சேர, உயர் நீதிமன்ற மதுரை கிளை, இடைக்கால தடை விதித்தது. 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிரான மனுக்கள் அனைத்தும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடிசெய்யப்பட்டன.இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய இடைக்கால தடை உத்தரவும், நேற்று முன்தினம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, பள்ளி கல்வித் துறைக்கு தேர்வான ஆசிரியர் களுக்கு, நேற்று பிற்பகல்,திடீரென, பணி நியமனஉத்தரவுகள் வழங்கப்பட்டன.இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு:செப்., 1ம் தேதி முதல், 5ம் தேதி வரை நடந்த கலந்தாய்வில் பங்கேற்று, பணியிடத்தை தேர்வு செய்தவர்களுக்கு, இன்று (நேற்று), பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் அனைவரும், உடனடியாக, சம்பந்தபட்ட பள்ளியில் பணியில் சேர வேண்டும்.இவ்வாறு, கல்வித்துறை அறிவித்துள்ளது.இதேபோல், தொடக்கக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பில், 'இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு, உரிய சான்றிதழ்களுடன் சென்று, பணி நியமன உத்தரவை பெற்று, உடனடியாக, பணியில் சேர வேண்டும்' என,தெரிவிக்கப்பட்டுள்ளது.'புதிய ஆசிரியர்கள் அனைவரும், இன்றே பணியில் சேர வேண்டும்' என, பணி நியமன உத்தரவை வழங்கிய அதிகாரி கள், அறிவுறுத்தி உள்ளனர்.



No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.