WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, September 26, 2014

டிஇடி வெயிட்டேஜ் விவகாரம் முடிவுக்கு வந்தது ஆசிரியர்களுக்கு பணி உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த மாதம் சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து, கடந்த 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை பணி நியமன கவுன்சலிங் நடந்தது. இதற்கிடையே, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து மதுரை உயர்நீதி மன்ற கிளையில் பட்டதாரிகள் சிலர் வழக்கு தொடர்ந்து தடை கேட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் பணி நியமன கவுன்சலிங் நடத்தலாம். ஆனால் பணியில் யாரும் சேரக்கூடாது என்று உத்தரவிட்டது. அதேபோல சென்னை உயர் நீதிமன்றத்திலும் சிலர் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். மேற்கண்ட இரண்டு வழக்குகளும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து, கவுன்சலிங்கில் பணி இடங்களை தேர்வு செய்தவர்கள் நேற்று மதியமே அந்தந்த மையங்களுக்கு சென்று பணி நியமன உத்தரவுகளை பெற்றுக் கொண்டு உடனடியாக பணியில் சேரவேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளன.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கவுன்சலிங்கில் கலந்து கொண்டு பணியிடங்களை தேர்வு செய்தவர்கள் அனைவருக்கும் 25ம் தேதி பிற்பகல் முதல் அந்தந்த கவுன்சலிங் மையங்களில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது. எனவே அனைத்து ஆசிரியர்களும் அந்தந்த மையங்களுக்கு சென்று பணி நியமன ஆணைகளை பெற்று, பணி நியமனம் பெற்ற பள்ளிகளில் உடனடியாக பணியில் சேர வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, நேற்று மதியம் அந்தந்த கவுன்சலிங் மையங்களுக்கு ஆசிரியர்கள் சென்று பணி நியமன ஆணைகளை பெற்றுச் சென்றனர். பணி நியமன உத்தரவு பெற்றவர்கள் இன்று முதல் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.