WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, October 29, 2014

நெட் தேர்வு: டிச.,28ல் நடத்த சிபிஎஸ்இ முடிவு.

                             




'நெட்' (தேசிய தகுதித் தேர்வு) தேர்வை மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) டிசம்பர் 28ம் தேதி நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுவரை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) நடத்தி வந்த இந்தத் தேர்வை, முதல்முறையாக 2014 டிசம்பரில் சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. இனி ஆண்டுக்கு இரு முறை இந்தத் தேர்வை சி.பி.எஸ்.இ.தான் நடத்தவுள்ளது.

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் இளநிலை ஆராய்ச்சி பெல்லோஷிப் மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கு தேசிய அளவில் நெட் தேர்வு நடத்தப்படுகிறது.

நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் கவனத்துக்கு:

• நவ.15ம் தேதி வரை விண்ணப்பங்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.

• சின்டிகெட் வங்கி, கனரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி மூலம் விண்ணப்ப கட்டணத்தைச் செலுத்த நவ.,18 கடைசி.

• ஆன்லைன் விண்ணப்பத்தை நகல் பெற நவ.,28 கடைசி நாளாகும்.

• பிரதி எடுத்த விண்ணப்பத்தைச் சம்பந்தப்பட்ட ஒருங்கிணைப்பு மையத்தில் சமர்ப்பிக்க நவ.,25 கடைசி தேதியாகும்.

கூடுதல் தகவல்களுக்கு சிபிஎஸ்இ இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.