WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, October 30, 2014

தினமும் 2 கிளாசுக்கு மேல் பால் குடித்தால் உயிருக்கு ஆபத்தாம்!


                                        

லண்டன்: தினமும், இரண்டு கிளாசுக்கு அதிகமாக பால் குடித்தால், உயிருக்கு ஆபத்து என, ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சுவீடனில் உள்ள உப்சலா பல்கலையின் பேராசிரியர் கார்ல் மைக்கேல்சன் கூறியதாவது: பால் குடிப்பதால் ஏற்படும் நன்மை, தீமை குறித்து, கடந்த, 20 ஆண்டுகளாக ஆய்வு நடத்தினோம். 61 ஆயிரம் பெண்கள், 45 ஆயிரம் ஆண்களிடம் இந்த ஆய்வை நடத்தினோம்.

இதில், தினமும், இரண்டு கிளாசுக்கும் அதிகமாக, அதாவது, அரை லிட்டர் அல்லது அதற்கு அதிகமாக பால் குடிப்போருக்கு, பல்வேறு பாதிப்பு ஏற்பட்டு, விரைவிலேயே உயிரிழப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது.

குறைவாக பால் குடிப்போரை விட, அதிகமாக பால் குடிப்போர் மிக விரைவாக உயிரிழப்பதையும் எங்கள் ஆய்வில் உறுதி செய்துள்ளோம். பாலில் கலந்திருக்கும் ’லக்டோஸ் மற்றும் கிளாக்டோஸ்’ என்ற பொருட்கள் (சர்க்கரை தன்மை) காரணமாக, பல்வேறு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாக எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.