WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, October 29, 2014

வரும் 30, 31ம் தேதிகளில் தலைமை ஆசிரியர் கலந்தாய்வு

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நியமன கலந்தாய்வு, வரும், 30, 31ம் தேதிகளில் நடக்கிறது.

பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவிப்பு: நடப்பு கல்வி ஆண்டில், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இந்த பள்ளி களில், தலைமை ஆசிரியர் நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, வரும், 30ம் தேதியும், தற்போது இந்த பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர் (உயர்நிலைப் பள்ளி) பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, 31ம் தேதியும் நடக்கிறது. இணையதள வழியில், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், காலை, 10:00 மணி முதல், கலந்தாய்வு நடக்கும். மேலும், தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில், 450 முதுகலை ஆசிரியரை, பதவி உயர்வு மூலம் நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, 31ம் தேதி நடக்கும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.