WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, October 2, 2014

300 எம்.பி.பி.எஸ்., இடங்கள்: அரசு நேரடியாக ஒதுக்கீடு : மூன்று கல்லூரிகளின் கதி என்ன?

தமிழகத்தில், இரண்டு சுய நிதி மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., இடங்களை, அரசு நேரடி ஒதுக்கீடு செய்தது. காத்திருந்த மாணவர்களில், 'கட் - ஆப்' அடிப்படையில், 300 பேருக்கு, அரசுக் கட்டணத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கிடுக்கிப்பிடிதமிழகத்தில், ஐந்து சுய நிதி மருத்துவக் கல்லூரிகளில், போதிய வசதிகள் இல்லை எனக் கூறி, இந்த ஆண்டு, எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) அனுமதி மறுத்தது; இதனால், 700 இடங்களில், மாணவர்களை சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
அனுமதி கிடைக்காத கல்லூரிகள், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதில், பல்வேறு கிடுக்கிப்பிடி விதிமுறைகளின் கீழ், திருச்சியில் உள்ள, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், சென்னையில் உள்ள தாகூர் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு, கடைசி நேரத்தில் அனுமதி கிடைத்தது.இட ஒதுக்கீடுஇரண்டு கல்லூரிகளிலும் மொத்தம், 300 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. காத்திருப்போர் பட்டியலில் இருந்த, 300 பேருக்கு, கட் - ஆப் மதிப்பெண் அடிப்படையில், சுழற்சி முறையில், தமிழக அரசு, நேரடியாக இட ஒதுக்கீடு அளித்தது.இதுகுறித்து, மருத்துவக்கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:'மாணவர் சேர்க்கை அரசு ஒதுக்கீட்டில் நடக்கும்; சுயமாக மாணவர்களை சேர்க்க முடியாது. இதை ஏற்கும் சுய நிதி கல்லூரிகள் விருப்பக் கடிதம் தரலாம்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதன்படி, தமிழகத்தில், இரண்டு கல்லூரிகள் விருப்பம் தெரிவித்து, கடிதம் கொடுத்தன.

மாணவர் சேர்க்கைக்கு இறுதி நாளான, செப்., 30ம் தேதி, இது பற்றிய தகவல், எம்.சி.ஐ., மூலமாக கிடைத்து. இரு கல்லூரிகளிலும், தலா, 150 இடங்கள் இருந்தன. காத்திருப்போர் பட்டியலில் இருந்த, 300 மாணவர்களுக்கு, கட் - ஆப் மதிப்பெண் அடிப்படையில் ஒதுக்கப்பட்டன.இதுபற்றிய விவரங்கள், tணடஞுச்டூtட.ணிணூஞ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் ஒதுக்கீடு கடிதத்தை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.மற்ற கல்லூரிகளின் கதி?அனுமதி கிடைக்காத, ஐந்து மருத்துவக் கல்லூரிகளில், இரண்டு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்துள்ளன; மற்ற மூன்று சுய நிதி கல்லூரிகளும், சுப்ரீம் கோர்ட் நிபந்தனைப்படி விருப்பம் தெரிவிக்காததால், அனுமதி கிடைக்கவில்லை.

மாணவர் சேர்க்கை, செப்., 30ம் தேதியுடன் முடிந்ததால், இனி வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

ரூ.12 ஆயிரத்தில் மருத்துவ படிப்பு

தமிழகத்தில் உள்ள சுய நிதி கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கு, 50 லட்சம் வரை நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, ஒதுக்கீடு பெற்றவர்கள், ஓ.சி., பி.சி., பி.சி.,(மு), எம்.பி.சி., மாணவர்கள், ஆண்டு கட்டணமாக, அரசு நிர்ணயித்த, 12,290 ரூபாயும், எஸ்.சி., - எஸ்.சி., (அ), எஸ்.டி., பிரிவினருக்கு, 10,290 ரூபாய் கட்டணத்தில், மருத்துவக்கல்வி பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.