தமிழகத்தில் அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலை நீடித்து வந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் அந்த இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதேபோல இந்த ஆண்டு 100 உயர்நிலைப் பள்ளிகள் மேனிலைப் பள்ளிகளாக தரம் உயர்த் தப்பட்டுள்ளன. ஆனால், உயர்நிலைப் பள்ளிகளை பொருத்தவரை 300 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் உயர்நிலைப் பள்ளிகளில் ஒய்வு பெறும் தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் அல்லது பணியில் இறந்துபோனால் ஏற்படும் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்புவார்கள். கடந்த ஆண்டு இது போல ஏற்பட்ட பணியிடங்களை டிசம்பரில் தான் நிரப்பினர். இந்த ஆண்டு தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூன் மாதம் வரை கணக்கெடுப்பு நடத்தி, ஜூலை மாதம் கவுன்சலிங் நடத்தப்பட்டது. ஆனால் இன்னும் 300 பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் நியமிப்பதற்கான பணி ஆணைகள் வழங்கப்படவில்லை.
பள்ளிகளில் இரண்டாம் பருவம் தொடங்கிவிட்டது. பத்தாம் வகுப்பு மற்றும் மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வை எழுத வேண்டிய நிலையில் உள்ளனர். அவர்களை தேர்வுக்கு தயார் படுத்த தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். தலைமை ஆசிரியர் நியமனம் தொடர்பாக நீதிமன்ற வழக்கு இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த வழக்கு முடிந்து எப்போது தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பதையும் தெளிவாக்கவில்லை. வரும் டிசம்பர் மாதத்திலாவது பணி நியமன ஆணைகள் வழங்கினால் பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்ய முடியும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.