தலைமை ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வு கலந்தாய்வு
31-ந்தேதி நடக்கிறது
சென்னை,அக்.29-
பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2014-2015 கல்வி ஆண்டில் 100 அரசு மேல்நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும் சில அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகக்கிடக்கின்றன. தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கும், தலைமை ஆசிரியர் காலியாக இருக்கும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு 31-ந்தேதி நடக்கிறது.
இதைத்தொடர்ந்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முது நிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.
தரம் உயர்த்தப்படும் 100 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு 31-ந்தேதி நடக்கிறது. இந்த கலந்தாய்வுகள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது.
இந்த தகவலை வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.