குரூப்-4 தேர்வில் வயது வரம்பில் சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 பதவிகளுக்கான அறிவிப்பை கடந்த 14-ஆம் தேதி அறிவித்தது. மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை 4,963. இதற்கான விண்ணப்பம் அனுப்ப கடைசி தேதி நவம்பர்-12. தேர்வுகள் வரும் டிசம்பர்-21ம் தேதி நடைபெறும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான கல்வித்தகுதி 10ம் வகுப்பு.
10ம் வகுப்பு முடித்த பி.சி., எம்.பி.சி., பி.சி(எம்)., டி.டபுள்யூ ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு 32 என்றும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 35 என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை என்று தேர்வாணையம் நிர்ணயித்துள்ளது. இந்த கட்டுப்பாட்டால் 10ம் வகுப்பு மட்டுமே முடித்த பலரும் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே, அவர்கள் நலன்கருதி 10-ஆம் வகுப்பு மட்டுமே முடித்தவர்களுக்கு வயது வரம்பை 40ஆக உயர்த்த ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.