WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, October 22, 2014

குரூப்-4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி!!


இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் 4,963 காலியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி குரூப்-4 எழுத்துத் தேர்வு டிசம்பர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி.

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (பொது) செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் (ஸ்டடி சர்க்கிள்) மூலம் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பயிற்சி வகுப்புகள் நவம்பர் மாதத்தில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.

இலவசப் பயிற்சியில் கலந்துகொள்ள தேர்வுக்கு விண்ணப்பித்த அத்தாட்சி, 10-ம் வகுப்பு கல்வி சான்றிதழ் , வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை நகல்களுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை (பொது) வரும் 28-ம்தேதிக்குள் நேரில் அணுகுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ஏ.சுந்தரவள்ளி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.