WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, October 15, 2014

சிறுபான்மை மொழி பாடங்களுக்கு தேர்வு பட்டியல் வெளியீடு

சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல், நேற்றிரவு வெளியிடப்பட்டது. டி.இ.டி., - ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களில், அனைத்துப் பாடங்களுக்கும் இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி.,யான ஆசிரியர் தேர்வு வாரியம், ஏற்கனவே வெளியிட்டது. இதில், தேர்வு பெற்ற, 12,500 பேர்,

ஆசிரியர் பணியில் சேர்ந்து விட்டனர். ஆனால், கன்னடம், தெலுங்கு, உருது, மலையாளம் ஆகிய நான்கு சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான தேர்வுப் பட்டியல் மட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் நேற்றிரவு, நான்கு சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டது. பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சென்னை, கோவை மாநகராட்சிகளின் கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்ள இடங்களுக்கு, தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு பெற்றவர்களின் பட்டியல், சம்பந்தபட்ட துறைகளுக்கு, ஓரிரு நாளில், ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பும். அதன்பின், அந்தந்த துறைகள், பணி நியமன உத்தரவை வழங்கும். மொத்தத்தில், 1,000 ஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.