கடலூர்: கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து கடலூர்
பெரியார் அரசு கலைக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களாக 14 பெண்கள் உட்பட 32 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு குறைவான தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த குறைவான தொகுப்பு ஊதியத்தைக்கூட கடந்த ஜூன் மாதம் முதல் வழங்கவில்லை. இதனால் கவுரவ விரிவுரையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உடன் ஊதியத்தை வழங்க வலியுறுத்தி நேற்று கல்லூரி வளாகத்தில் மணிகண்டன், துளசி, காசிராஜன் உட்பட அனைத்து கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.