WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, October 28, 2014

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : பள்ளி கல்வி செயலர் ஆஜர்.

சென்னை : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பள்ளி கல்வித் துறை செயலர்
சபீதா, உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆசிரியர்களுக்கு, சிறப்பு நிலை அந்தஸ்து வழங்குவது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம், ஒரு உத்தரவை பிறப்பித்தது. அந்த உத்தரவு படி, ஆசிரியர்கள் பலருக்கு, சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கப்படவில்லை என, பள்ளி கல்வித் துறை செயலருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு, நீதிபதிகள் அக்னிஹோத்ரி, சசிதரன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி கல்வித் துறை செயலர், சபீதா, நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம், நீதிபதிகள், 'அதிகாரிகளை, நீதிமன்றத்துக்கு வரவழைக்க நாங்கள் விரும்பவில்லை. நீதிமன்ற உத்தரவை, ஏன் அமல்படுத்தவில்லை. உத்தரவை நிறைவேற்ற, கால அவகாசம் வேண்டும் என்றால், அதை நீங்கள் கேட்கலாம்; இல்லை என்றால், மேல்முறையீடு செய்யலாம்' என்றனர். கல்வித் துறை சார்பில், சிறப்பு அரசு பிளீடர் கிருஷ்ணகுமார், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை, உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.