WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, October 19, 2014

சி-டெட் தேர்வு முடிவு வெளியீடு

கேந்திரீய வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகள், திபெத்திய பள்ளிகள் மற்றும் யூனியன் பிரதேச அரசின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் சி-டெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். சி-டெட் தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடத்தியது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஆறரை லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வெழுதினர். தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 7 ஆயிரம் பேர் தேர்வில் கலந்துகொண்டனர். இந்த நிலையில், சி-டெட் தகுதித்தேர்வு முடிவை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.ctet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.