கணினி பயிற்றுநர் பணிநியமனம் பதிவு மூப்பு அடிப்படை யில் நடக்க இருப்பதால், ஆசிரியர் தேர்வு வாரியத் துக்கு யாரும் விண்ணப்பம் அனுப்ப வேண்டாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 652 கணினி பயிற்றுநர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கணினி பயிற்றுநர் பணி நியமனம் அனைத்தும் வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படை யில் நடக்கிறது. வேலை வாய்ப்பகம் பரிந்துரை செய்யும் நபர்கள் மட்டுமே தெரிவுப் பணிகளுக்கு பரிசீலிக்கப்படுவார்கள்.
அதனால், ஆசிரியர் தேர்வு வாரியம் கணினி பயிற்றுநர்களை தேர்வு செய்வது தொடர்பாக எந்த விண்ணப்பங்களையும் கேட்கவில்லை. அதனால் இந்த பணி நியமனம் தொடர்பாக விண்ணப்பங்களை நேரடியாக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்ப வேண்டாம். இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.