டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட அறிவிப்பு:தமிழ்நாடு இந்து சமய
அறநிலைய ஆட்சித்துறை நிர்வாக துறையில் “உதவி ஆணையர்” பதவிக்கான 4 காலிப்பணியிடத்துக்கு எழுத்துத் தேர்வு கடந்த மார்ச் 8, 9ம் தேதிகளில் கணினி வழித்தேர்வு முறையில் நடத்தப்பட்டது. அதில் 242 பேர் பங்கேற்றனர்.இத்தேர்வில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீடு உள்ளிட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல்,

சான்றிதழ் சரிபார்ப்பில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர் பதிவெண் கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டது. அச்சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாகத் தேர்வு செய் யப்பட்ட 12 பேரின் பதிவெண் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் வெளியிடப்பட்டுள்ளது. நேர்காணல் தேர்வு வருகிற 28ம் தேதி சென்னை பிராட்வேயில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.