அரசு ஊழியர்கள் தங்களது பணியை ராஜிநாமா செய்தாலும், குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் ஓய்வூதியம் பெறும் தகுதி உண்டு என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த எம்.சுப்பையா (78) தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன் இவ்வாறு உத்தரவிட்டார்.
மனுவில், பழனி தாலுகா ஒபுளாபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 1955ஆம் ஆண்டு ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். 1972ஆம் ஆண்டு பணியை ராஜிநாமா செய்தேன். அந்த சமயத்தில் ஆசிரியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் எதுவும் இல்லை. ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்பட்டதும் ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்தேன். எனது கோரிக்கையை ஓய்வூதியத் துறை இயக்குநர் நிராகரித்தார். எனக்கு, ஓய்வூதியம் பெறுவதற்கானத் தகுதி உள்ளது. எனவே, மாத ஓய்வூதியம், நிலுவை தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன் பிறப்பித்த உத்தரவில், அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியான குறிப்பிட்ட காலம் வரை பணியாற்றிய பின்பு பணியை ராஜிநாமா செய்தால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கலாம் என்று அரசாணை உள்ளது. இந்த அரசாணைப்படி மனுதாரருக்கு ஓய்வூதியம் பெறத் தகுதி உள்ளது. எனவே, மனுதாரரின் கோரிக்கையை ஓய்வூதியத்துறை இயக்குநர் 4 வாரத்துக்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.