WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, October 27, 2014

அரபிக் கடலில் "நிலோஃபர்' புயல்


அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் "நிலோஃபர்' புயலாக வலுவடைந்துள்ளது.

அரபிக் கடலில் கடந்த சில நாள்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக ஞாயிற்றுக்கிழமை வலுவடைந்துள்ளது.

இந்தப் புயலுக்கு "நிலோஃபர்' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பெயரை பாகிஸ்தான் சூட்டியுள்ளது. "நிலோஃபர்' என்ற அரேபிய மொழி சொல்லுக்கு "அல்லி மலர்' என்று பொருள்.

இந்தப் புயல் மும்பையில் இருந்து 1,270 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்தப் புயல் இப்போது வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. பின்னர் இந்த புயல் திசை மாறி வடகிழக்கு திசையில் வடகுஜராத் - பாகிஸ்தானை நோக்கி நகரும். இந்த புயல் தீவிர புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை: இந்தப் புயலின் காரணமாக தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. அதேவேளையில் குமரிக்கடல் - தெற்கு தமிழ்நாடு ஒட்டிய பகுதியில் உருவாகியுள்ள வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்யும். பிற பகுதிகளிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தின் பல இடங்களில் திங்கள்கிழமையன்று மிதமான மழையோ கனமழையோ பெய்யும். சென்னையைப் பொருத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான நிலவரப்படி வால்பாறையில் 100 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. நாமக்கல்லில் 70 மி.மீ., பெருந்துறை, சின்னக்கல்லாறு, அவிநாசி, ஒகேனக்கல்லில் 60 மி.மீ., திருச்சி, உத்தமபாளையம், தளி, போச்சம்பள்ளியில் 50 மி.மீ. மழை பதிவானது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.