சென்னை, அக். 20- தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் இன்றும்
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த 3 நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது. நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், சென்னை, கடலூர் மற்றும் கடலோர மாவட்டங்களிலும் பலத்த, மிக பலத்த மழை பெய்து வருகிறது. கோவை, சேலம், திருப்பூர் ஆகிய மேற்கு மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் மழை பெய்து இருக்கிறது. சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, திருப்பூர், ஈரோடு, தஞ்சை, நாகை, கடலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், தென்மேற்கு வங்க கடலில் இலங்கைக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை இன்றும் தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால் மேலும் 2 நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் சுரேஷ் குமார் அறிவித்துள்ளார். இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் இன்று விடுமுறை விடப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.