WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, November 24, 2014

விருதுநகரில் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி!?

விருதுநகரில் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.8
லட்சம் மோசடி செய்த தம்பதியினர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் பர்மா காலனியைச் சேர்ந்தவர் பாத்திமாகனி(35). இவர் பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்து வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், அரசு பள்ளியில் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி மதுராந்தகத்தைச் சேர்ந்த சேகர்-பத்மசுந்தரி தம்பதியினர் இவரை அணுகியுள்ளனர். இதற்கு குறிப்பிட்ட அளவு தொகை செலவு ஆகும் என்றும், அதை வங்கியில் வைப்பாக செலுத்தினால் போதும் என  தெரிவித்தார்களாம். இதை உண்மையென நம்பிய பாத்திமாகனி கடந்த 15.11.2011 அன்றைய நாளில் இருந்து தேசிய வங்கி கிளையில் பல்வேறு தவணைகளில் ரூ.8 லட்சம் வைப்பாக செலுத்தினாராம். இந்நிலையில், குறிப்பிட்ட நாள்கள் கடந்த நிலையிலும் வேலை வாங்கித் தராமல் இருந்துள்ளனர். இதையடுத்து, தம்பதியினர் மீது சந்தேகம் அடைந்த பாத்திமாகனி வைப்பாக செலுத்திய வங்கி கிளையை அணுகி விசாரணை செய்ததில் பணம் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அப்போது, தான் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. உடனே இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பாத்திமாகனி புகார் செய்தார். அதன் அடிப்படையில்  தம்பதியினர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிதது வருகின்றனர்.    

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.