WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, November 15, 2014

உதவி பேராசிரியர் பணி நேர்முக தேர்வுக்கு அழைப்பு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 1,064 உதவி பேராசிரியர் நியமன விவகாரத்தில், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட, ஆறு பாடங்களுக்கான நேர்முகத் தேர்வு அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே, ஆங்கிலம் உள்ளிட்ட, சில பாடங்களுக்கு, நேர்முகத் தேர்வை நடத்தி, தேர்வுப் பட்டியலையும், டி.ஆர்.பி., வெளியிட்டுவிட்டது. தற்போது, வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், வரலாறு, சுற்றுலா, சுற்றுலா மற்றும் சுற்றுலா நிர்வாகம் ஆகிய, ஆறு பாடங்களுக்கு, நேர்முகத் தேர்வு அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது. நேர்முகத் தேர்வு, வரும் 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை, சென்னையில் உள்ள டி.ஆர்.பி., அலுவலகத்தில் நடக்கும் எனவும், அழைக்கப்பட்டு உள்ளவர் விவரம், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாகவும், டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது. தேர்வர்கள், இணையதளத்தில் இருந்து, அழைப்புக் கடிதத்தை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உதவி பேராசிரியர் தேர்வுக்கு, கற்பித்தல் அனுபவத்திற்கு, 15 மதிப்பெண், கல்வித்தகுதிக்கு, 9 மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வுக்கு, 10 மதிப்பெண் என, 34 மதிப்பெண் அடிப் படையில், இறுதியாக, தேர்வுப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.