WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, November 23, 2014

புவியியலாளர் பணி: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு.

சென்னை:தமிழகத்தில் காலியாக உள்ள ஒரே ஒரு, உதவி புவியியலாளர்
பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.இதுகுறித்த செய்திக் குறிப்பு:புவியியலில், முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை, www.tnpscexams.net என்ற முகவரியில், இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.இப்பதவிக்கான கம்ப்யூட்டர் வழித்தேர்வு, 2015 பிப்., 1ம் தேதி, சென்னை மையத்தில், முற்பகல் மற்றும் பிற்பகலில் நடக்கும். இத்தேர்விற்கு, டிச.,17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட தகவல்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.