WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, December 13, 2014

3 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு.

விருதுநகர் மாவட்டத்தில் 3 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக
தரம் உயர்த்தி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள என்.ஜி.ஓ காலனி நடுநிலைப்பள்ளி, சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் கோப்பநாயக்கன்பட்டி நடுநிலைப்பள்ளி மற்றும் வெம்பக்கோட்டை ஒன்றியம் முத்தாண்டியாபுரம் நடுநிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளையும் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு தேவையான ஆசிரியர்களை பாடவாரியாக பணி நிரவல் மூலம் ஒதுக்கீடு செய்யவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.