WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, December 2, 2014

குரூப் 4 தேர்வு: விண்ணப்பதாரர் விவரங்கள் வெளியீடு

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் விவரங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வி.சோபனா திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரும் 21-ஆம் தேதியன்று குரூப் 4 தேர்வை நடத்துகிறது. 4 ஆயிரத்து 963 காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வை நடத்தவுள்ளது. இந்தத் தேர்வுக்கென 13 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து உரிய விண்ணப்பக் கட்டணம், தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களின் விவரங்கள், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் www.tnpsc.gov.in-இல் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 4 பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணைப் பதிந்து, விண்ணப்பம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பெறப்பட்டதற்கான விவரத்தைச் சரிபார்த்துக்கொள்ளலாம்.

சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து உரிய விண்ணப்பக் கட்டணம் செலுத்தியும் அதன் விவரம் இணையதளத்தில் இல்லாவிட்டால் அந்த விண்ணப்பதாரர்கள், பணம் செலுத்தியதற்கான ரசீதின் நகலுடன் தேர்வாணையத்தின் முகவரியான contacttnpsc@gmail.com-க்கு, வரும் 5 ஆம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பதாரரின் பெயர், தொகுதி 4 பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான விண்ணப்பப் பதிவு எண், விண்ணப்பம், தேர்வுக் கட்டணம் (ரூபாய்), கட்டணம் செலுத்திய இடம் (அஞ்சலகம், இந்தியன் வங்கி), வங்கிக் கிளை, அஞ்சலக முகவரி ஆகிய விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

1 comment:

  1. ஆசிரியர் சொந்தங்களே ஒரு முக்கிய செய்தி... வெய்ட்டேஜ் தொடர்பான,ஆசிரியர் தகுதிதேர்வு தொடர்பான உங்கள் கோரிக்கையை எங்களிடம் தெரிவிக்கவும்...


    ஆசிரியர் சொந்தங்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி.....

    ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் அமைப்பின் நிர்வாகிகள் தமிழக முதல்வர் ஒ.பன்ணீர்செல்வம் அவர்களை சந்தித்து பேச வாய்ப்பு தருவதாக முதல்வரின் நேர்முக உதவியாளர் தெரிவித்துள்ளார் ஆகவே இன்று இரவுக்குள் நாங்கள் மாதிரி கோரிக்கை மனுவினை பேக்ஸ் மூலம் அனுப்ப வேண்டி உள்ளது...

    ஆகவே போராட்டத்தில் கலந்துகொண்ட மற்றும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஏதேனும் கோரிக்கை தெரிவிப்பதாக இருந்தால் இன்று மாலை உடனடியாக தொலைபேசி மூலமாகவோ மெயிலுக்கு எழுத்து மூலமாகவோ தெரிவிக்கலாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம்...

    இதை படித்துவிட்டு வாட்ஸப், பேஸ்புக்,மற்றும் அனைத்து கல்வி வலைதளங்களிலும் ப் தயவுசெய்து பகிரவும்

    இப்படிக்கு
    செல்லத்துரை மாநிலதலைவர், 98436 33012
    கபிலன் மாநில செயலாளர், 90920 19692
    ராஜலிங்கம் புளியங்குடி மாநில பொருளாளர் 95430 79848

    E.mail- rajalingam.rp@gmail.com

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.