திருப்பூர் மாவட்ட அளவில், உடுமலை அரசு மற்றும் அரசு உதவிபெறும்
பள்ளிகளில், ஏழு ஆசிரியர்களுக்கு கல்வித்துறையின் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பொதுத்தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சி, உயர்மதிப்பெண் பெற உறுதுணையாக விளங்குதல், மாணவர்களின் திறன்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுதல் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில், 9 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலிருந்து, ஏழு ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர், பல்லடத்தில் புரபசனல் பொறியியல் கல்லுாரியில் விருது வழங்கும் விழா நடந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் தலைமை வகித்தார். தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.
உடுமலை, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உதவித் தலைமையாசிரியர் சிவக்குமார், ஆங்கிலாசிரியர் பழனிச்சாமி, பொருளியல் ஆசிரியர் மாரியப்பன், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழாசிரியர் வசந்தராஜன், விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், வணிகவியல் ஆசிரியர் சுகந்தி, ஆங்கிலாசிரியர் சுகந்திலதா மற்றும் நுாறு சதவீத தேர்ச்சி மற்றும் உயர்மதிப்பெண் பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் பட்டியலில், பாரதியார் நுாற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 19, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 15, விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 35 ஆசிரியர்களுக்கும், விருது வழங்கப்பட்டது.
மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே கணியூர் வெங்கிடகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஓவிய ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கு, திருப்பூர் மாவட்ட அளவிலான நல்லாசிரியர் விருதும், இந்தப் பள்ளியில் பல்வேறு பாடங்களில் மாணவர்களை 100 மதிப்பெண்கள் பெற வைத்த ஆசிரியர்கள் அன்பழகன், சசிகலா, இசைவாணி, ஜெயசங்கர், தமிழ்செல்வி, அமுதா ஆகியோருக்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி கணியூர் பள்ளியில் நடந்தது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.