WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, December 1, 2014

ஆசிரியர்கள் பாதுகாப்பு சட்டம் தேவை.

சென்னை: ஆசிரியர்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என,
அனைத்து உடற்கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. சென்னையில், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜா கூறியதாவது: உடற்கல்வி ஆசிரியர்கள், 25 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் பணியாற்றுவதால், அவர்களுக்கு கணக்கு தேர்வை ரத்து செய்து, பதவி உயர்வு வழங்க உத்தரவிட்ட அரசுக்கு, நன்றியை தெரிவிக்கிறோம். மதுரையில் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்த உள்ளோம். கோடம்பாக்கத்தில், தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் பாஸ்கரை தாக்கிய கும்பலுக்கு, கண்டனம் தெரிவிப்பதுடன், இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க, ஆசிரியர்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர, அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.ஆசிரியர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக, அனைத்து மெட்ரிக், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.