WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, December 31, 2014

ஆசிரியர் போட்டி தேர்வு: புதிய விடைத்தாள் அறிமுகம்

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு, ஜன., 10ல் நடக்க உள்ளது. இதை கண்காணிக்க, மாவட்டங்களில் கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் உறுப்பினர் செயலராக, முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் எஸ்.பி.,க்கள் இடம் பெற்றுள்ளனர். மையம் அமைப்பது, வினாத்தாள், விடைத்தாள்களை கொண்டு சேர்ப்பது, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை அவர்கள் மேற்கொள்வர். இத்தேர்வில், முதன்முறையாக தேர்வர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் வழங்கப்படுகிறது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கடந்தாண்டுகளில், இத்தேர்வு விடைத்தாள்களில் தேர்வர்கள் தங்கள் பெயர், தேர்வு எண்ணை வட்டமிடுவர். அதில் சில இடங்களில் தவறு ஏற்பட்டது; சர்ச்சைக்கும் வழிவகுத்தது. இந்நிலையில், முறைகேடு களை தவிர்க்க, இம்முறை தேர்வர்களுக்கு அவர்களின் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் வழங்கப்படுகிறது. அதில் அவர்களின் பெயர், தேர்வு எண் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.