WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, December 11, 2014

அரையாண்டு தேர்வில் தேராத மாணவர்களுக்கு உடனடி தேர்வு; சி.இ.ஓ.,தகவல்

விருதுநகர் : ""10ம் வகுப்பு அரையாண்டுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உடனடி தேர்வு நடத்தப்பட உள்ளது,''என, முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மார்ச் மாதம் துவங்க உள்ள 10ம்வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு அனைத்துப்பாடங்களின் முக்கிய வினா-விடை கையேடு வழங்கப்பட்டுள்ளது. அரையாண்டுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜன.,5 முதல் 13 வரை பாடவாரியாக உடனடித்தேர்வு நடத்தப்பட உள்ளது. அவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.