WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, December 9, 2014

பள்ளிக்கல்வி துறை இயக்குனர் மாற்றம்

தமிழக பள்ளிக்கல்வித் துறையின், புதிய இயக்குனராக, கண்ணப்பன்
நியமிக்கப்பட்டு உள்ளார். பள்ளிக்கல்வித் துறையின் இயக்குனராக இருந்தவர், ராமேஸ்வர முருகன். ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வில், பல இடங்களில் பிரச்னைகள் எழுந்தன. இது தொடர்பாக, ராமேஸ்வர முருகன், போதுமான முன்னேற்பாடுகள் செய்ய வில்லை. முறைகேடு கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என, ஆசிரியர்கள் மத்தியில் பரவலாக புகார் கூறப்பட்டது. இந்நிலையில், ராமேஸ்வர முருகன் மாற்றப்பட்டு, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குனராக நியமிக்கப்பட்டார். அப்பதவியில் இருந்த, கண்ணப்பன் பள்ளிக்கல்வித் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவுகளை, பள்ளிக்கல்வித் துறை பிறப்பித்து உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.