சென்னை, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு
652 தொழிற்கல்வி கணினி பயிற்றுனர் பணி காலியிடத்திற்கு மாநில அளவிலான பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலைவாய்ப்பு அலுவலக செய்திக்குறிப்பு:
இப்பணி காலியிடத்திற்கான கல்வித் தகுதி பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது பி.சி.ஏ., - பி.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி உடன் பி.இ.டி., முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு அனைத்து வகுப்பினருக்கும் கடந்த ஜூலை 1ம் தேதி அன்று 57 வயதிற்குள் இருக்க வேண்டும். முன்னுரிமையற்ற பிரிவில் எஸ்.சி., அருந்ததியின வகுப்பினர் 2010ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி; எஸ்.சி., 2008ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி; எஸ்.டி., 2010ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி; பி.சி., முஸ்லிம் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி; பி.சி., - எம்.பி.சி., மற்றும் இதர வகுப்பினர் 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி வரையிலும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
முன்னுரிமையுள்ள பிரிவில், 2011ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி முதல் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி வரையிலும் மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவை மற்றும் கலப்பு திருமண தம்பதியினர் அனைத்து பதிவுதாரர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இந்த பதிவு மூப்பிற்குள் பதிவு செய்துள்ள கடலூர் மாவட்ட பதிவுதாரர்கள் பட்டியல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக விளம்பர பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை நாளைக்குள் (5ம் தேதி) நேரில் வருகை புரிந்து உறுதி செய்து கொள்ள வேண்டும். பதிவு மூப்பு பெற்று பட்டியலில் இடம் பெறாதவர்கள் மட்டும் அசல் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு வேலைவாய்ப்பு அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.