தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், உடல் ஊனமுற்றோர் உள்ளிட்ட சிறப்பு குழந்தைகள் பலர் படித்து வருகிறார்கள். இந்த குழந்தைகளுக்கான சிறப்பு ஆசிரியர்களுக்கு 2013-14-ம் ஆண்டு சம்பளம் வழங்கப்படாமல் இருந்தது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்ததன் காரணமாக, நேற்று 2013-14-ம் ஆண்டுக்கான சம்பளம் அந்தந்த ஆசிரியர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. மேலும், 2014-ம் ஆண்டு முதல் இதுவரை வழங்கப்படாத சம்பளமும் விரைவில் வழங்கப்பட உள்ளது.
இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.